வெப் ஹோஸ்டிங் என்பது ஒரு தனி நபரோ அல்லது ஒரு நிறுவனமோ தன்னைப் பற்றியோ, தன் நிறுவனத்தைப் பற்றியோ இந்த உலகுக்கு இணையத்தின் மூலம் சொல்ல இது உதவுகிறது. ஒரு குறிப்பிட்ட நிறுவனம் இதை வழங்கும். இங்கு ஹோஸ்டிங் என்பதை வெப் சைட் என்று குறிப்பிடுவேன். ஆனால் இன்று வெறும் சொந்த டொமைன் வைத்து எழுதினாலே அது வெப்சைட் என்று சொல்லும் வண்ணம் ஆகிவிட்டது.
ப்ளாக் என்றால் என்ன என்று? அதாவது வலைப்பூ என்பது உங்களைப் பற்றி நீங்கள் எழுதும் டைரி போன்றது. ஆனால் வெப் சைட் என்பது ஒரு புத்தகம் எழுதுவது எனக் கொள்ளலாம். இரண்டிற்கும் பல வித்தியாசங்கள் உள்ளன.
பெரும்பாலும் ப்ளாக் எல்லாம் ஒரே வடிவமைப்பைக் கொண்டிருக்கும். பல மாற்றங்கள் செய்ய இயலாது. ஆனால் வெப் சைட் ஆனது ஒரு ப்ளாக் என்பதை விட மிக அதிக வசதிகளை கொண்டது. இதில் பல மாற்றங்கள் நாம் செய்யலாம். தள வடிவமைப்பு என்பது மட்டும் அல்ல, பல்வேறு வசதிகள்.
ஒவ்வொரு வெப் சைட்டும் ஒரு ப்ளாக் கொண்டிருக்கும். உதாரணமாக நீங்கள் ஒரு நிறுவனம் வைத்து உள்ளீர்கள் என்றால், அந்த வெப் சைட் மூலம் உங்கள் நிறுவனம் பற்றிய செய்திகளை சொல்ல வேண்டும். நிறுவனத்தில் நடந்த ஒரு நிகழ்வு பற்றி சொல்வது ப்ளாக். உதாரணம், ஒரு தொலைகாட்சி நிறுவனம் தன்னுடைய நிறுவனம் பற்றி நிகழ்ச்சிகள் பற்றி அதன் தளத்தில் சொல்லி இருக்கும், அதே ஒரு நிகழ்ச்சி ஒரு புதிய வசதி மூலம் உங்களுக்கு கிடைக்கும் என்றால் அதைப் பற்றி சொல்வதற்கு அதன் ப்ளாக் பயன்படுத்தும்.
மூலம் : http://www.muruganandam.in/2011/12/what-is-web-hosting.html#more
புதன், பிப்ரவரி 01, 2012
You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "
0 comments:
கருத்துரையிடுக