சனி, மார்ச் 17, 2012

சதத்தில் சதம் கண்டார் சச்சின்

16-03-2012 : வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சர்வதேச போட்டிகளில் 100-வது சதமடித்து சாதனை படைத்தார் சச்சின்.

தனது 462-வது ஒருநாள் போட்டியில் அவர் இந்த சாதனையை எட்டினார். ஷகிப் அல்ஹசன் வீசிய 43-வது ஓவரின் 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்து 100-வது சதத்தை நிறைவு செய்தார். 138 பந்துகளில் அவர் சதமடித்தார். கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தனது 99-வது சதத்தை அடித்த சச்சின், ஓர் ஆண்டு, 33 இன்னிங்ஸ்களுக்குப் பிறகே இப்போது 100-வது சதத்தை அடித்துள்ளார். இந்த ஆட்டத்தில் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளைத் தவிர்த்து வந்த சச்சின், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரில் களமிறங்கினார். அங்கு வரலாற்றுச் சாதனை நிகழ்த்தும் வாய்ப்பு நழுவியது.


டெஸ்ட் போட்டியில் 51 சதம், ஒருநாள் போட்டியில் 49 என சர்வதேச அளவில் 100 சதங்களை அடித்துள்ள சச்சினின் சாதனை மகத்தானது. கிரிக்கெட்டில் எத்தனையோ ஜாம்பவான்கள் வந்து போயிருக்கலாம். ஆனால் அவர்களில் பிராட்மேனை தவிர யாரும் பேசப்படுவதில்லை. கிரிக்கெட் உள்ளவரை சச்சினின் சாதனைகளும் வாழ்ந்து கொண்டிருக்கும். சச்சினும் பேசப்பட்டு கொண்டிருப்பார் என்று நம்புவோம்.

கடந்து வந்த பாதை...



1989: 16-வது வயதில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அப்போதைய இந்திய அணிக்கு ஸ்ரீகாந்த் கேப்டனாக இருந்தார். அந்த டெஸ்ட் தொடரில் 6 இன்னிங்ஸ்களில் விளையாடி 2 அரைசதங்கள் அடித்தார்.



1990: ஓல்டு டிராபோர்டில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார் (119 நாட் அவுட்) சச்சின்.



1993: சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் (165 ரன்கள்). இதுதான் இந்திய மண்ணில் அவர் அடித்த முதல் சதம்.



1994: இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிங்கர் கோப்பை ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார் சச்சின். 79-வது ஒருநாள் போட்டியில்தான் அவர் இந்த சதத்தை அடித்தார்.



1996: இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் இணைந்து நடத்திய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 2 சதம் உள்பட 523 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். அதே ஆண்டில் இந்திய அணியின் கேப்டனாகவும் உயர்ந்தார். சச்சின் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்க அணிகளை வீழ்த்தி டைட்டன் கோப்பையையும் கைப்பற்றியது.



1997: டொரன்டோவில் நடைபெற்ற 2-வது சஹாரா கோப்பை போட்டியில் சச்சின் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது. அந்த ஆண்டில் விஸ்டன் விருதையும் வென்றார்.



1998: சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் 155 ரன்கள் குவித்து, இந்தியா 179 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற உதவினார்.



2001: ஒருநாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை எட்டினார். அதே ஆண்டில் ஒருநாள் போட்டியில் 100-வது விக்கெட்டையும் வீழ்த்தினார்.



2002: டெஸ்ட் போட்டியில் 29 சதங்கள் அடித்த பிராட்மேனின் சாதனையை சமன் செய்தார். அதே ஆண்டில் இங்கிலாந்தின் ஹெட்டிங்லியில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் போட்டியில் 193 ரன்கள் குவித்து 30-வது சதம் கண்டார். இதன்மூலம் பிராட்மேனின் (29 சதங்கள்) சாதனையையும் அவர் தகர்த்தார். தனது 99-வது டெஸ்ட் போட்டியில் அவர் இந்த சாதனையை படைத்தார்.



2003: உலகக் கோப்பை போட்டியில் 11 ஆட்டங்களில் விளையாடி 673 ரன்கள் குவித்து அந்த உலகக் கோப்பையில் தொடர்நாயகன் விருதை வென்றார். இதன்மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு உலகக் கோப்பையில் அதிக ரன் குவித்தவர் என்ற பெருமையும் அவர் வசமானது.

2004: டெஸ்ட் போட்டியில் 34 சதங்கள் அடித்த சுனில் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்தார். கேரி கிர்ஸ்டன், ஸ்டீவ் வாஹ் ஆகியோருக்கு அடுத்தபடியாக டெஸ்ட் விளையாடும் அனைத்து நாடுகளுக்கு எதிராகவும் சதமடித்த 3-வது வீரர் என்ற பெருமையை எட்டினார். ஒருநாள் போட்டியில் 50 ஆட்டநாயகன் விருதை வென்ற முதல் வீரர் என்ற கெüரவத்தையும் பெற்றார்.

2005: தனது 122-வது டெஸ்ட் போட்டியில் 10 ஆயிரம் ரன்களைக் கடந்தார்.

2006: ஒருநாள் போட்டியில் 14 ஆயிரம் ரன்களைக் கடந்து உலக சாதனை படைத்தார். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற முத்தரப்புத் தொடரில் 40-வது சதத்தை நிறைவுசெய்தார்.



2007: 400-வது ஒருநாள் போட்டியில் விளையாடி சாதனை படைத்தார்.



2008: இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான சி.பி. தொடரின்போது ஒருநாள் போட்டியில் 16 ஆயிரம் ரன்களைக் கடந்தார். டெஸ்ட் போட்டியில் அதிக ரன் குவித்தவரான மேற்கிந்தியத் தீவுகள் வீரர் பிரையன் லாராவின் சாதனையை (11,953 ரன்கள்) முறியடித்தார்.

2009: ஹைதராபாதில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 175 ரன்கள் குவித்ததன் மூலம் ஒருநாள் போட்டியில் 17 ஆயிரம் ரன்களைக் கடந்தார் சச்சின்.

2010: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதமடித்தார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இரட்டைச் சதமடித்தவர் என்ற பெருமை அவர் அவசமானது. அதே ஆண்டில் அதிக டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஸ்டீவ் வாஹின் சாதனையை (168) முறியடித்தார்.

2011: உலகக் கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாடியபோது அதிக ஒருநாள் போட்டியில் விளையாடிய இலங்கை வீரர் சனத் ஜயசூர்யாவின் சாதனையை (444 ஆட்டங்கள்) முறியடித்தார். அந்த உலகக் கோப்பையில் 482 ரன்கள் குவித்தார். இதன்மூலம் இந்திய அணியில் அதிக ரன் குவித்தவரானார்.

2012: ஆசிய கோப்பை போட்டியில் வங்கதேசத்துக்கு எதிராக தனது 100-வது சதத்தை நிறைவு செய்து வரலாற்றுச் சாதனை படைத்தார். இந்த ஆட்டத்தில் அவர் 114 ரன்கள் எடுத்தார்.

டெஸ்ட் சதங்கள்



ரன் எதிரணி இன்னிங்ஸ் இடம் தேதி முடிவு

1. 119* இங்கிலாந்து 2 மான்செஸ்டர் 1990 ஆக.14 டிரா

2. 148* ஆஸ்திரேலியா 1 சிட்னி 1992 ஜன.6 டிரா

3. 114 ஆஸ்திரேலியா 1 பெர்த் 1992 பிப்.3 தோல்வி

4. 111 தென் ஆப்பிரிக்கா 1 ஜோகன்னஸ்பர்க் 1992 நவ.28 டிரா

5. 165 இங்கிலாந்து 1 சென்னை 1993 பிப்.12 வெற்றி

6. 104* இலங்கை 2 கொழும்பு 1993 ஜூலை 31 வெற்றி

7. 142 இலங்கை 1 லக்னௌ 1994 ஜன.19 வெற்றி

8. 179 மேற்கிந்தியத் தீவுகள் 1 நாகபுரி 1994 டிச.2 டிரா

9. 122 இங்கிலாந்து 2 பர்மிங்ஹாம் 1996 ஜூன் 8 தோல்வி

10. 177 இங்கிலாந்து 1 நாட்டிங்காம் 1996 ஜூலை 5 டிரா

11. 169 தென் ஆப்பிரிக்கா 1 கேப்டவுன் 1997 ஜன.4 தோல்வி

12. 143 இலங்கை 1 கொழும்பு 1997 ஆக.3 டிரா

13. 139 இலங்கை 1 கொழும்பு 1997 ஆக.11 டிரா

14. 148 இலங்கை 1 மும்பை 1997 டிச.4 டிரா

15. 155* ஆஸ்திரேலியா 2 சென்னை 1998 மார்ச் 9 வெற்றி

16. 177 ஆஸ்திரேலியா 1 பெங்களூர் 1998 மார்ச் 26 தோல்வி

17. 113 நியூசிலாந்து 2 வெலிங்டன் 1998 டிச.29 தோல்வி

18. 136 பாகிஸ்தான் 2 சென்னை 1999 ஜன.31 தோல்வி

19. 124* இலங்கை 2 கொழும்பு 1999 பிப்.28 டிரா

20. 126* நியூசிலாந்து 2 மொஹாலி 1999 அக்.13 டிரா

21. 217 நியூசிலாந்து 1 ஆமதாபாத் 1999 அக்.30 டிரா

22. 116 ஆஸ்திரேலியா 1 மெல்போர்ன் 1999 டிச.28 தோல்வி

23. 122 ஜிம்பாப்வே 1 புது தில்லி 2000 நவ.21 வெற்றி

24. 201* ஜிம்பாப்வே 1 நாகபுரி 2000 நவ.26 டிரா

25. 126 ஆஸ்திரேலியா 1 சென்னை 2001 மார்ச் 20 வெற்றி

26. 155 தென் ஆப்பிரிக்கா 1 புளோயம்பாண்டீன் 2001 நவ.3 தோல்வி

27. 103 இங்கிலாந்து 1 ஆமதாபாத் 2001 டிச.13 டிரா

28. 176 ஜிம்பாப்வே 1 நாகபுரி 2002 பிப்.24 வெற்றி

29. 117 மேற்கிந்தியத் தீவுகள் 1 போர்ட் ஆஃப் ஸ்பெயின் 2002 ஏப்.20 வெற்றி

30. 193 இங்கிலாந்து 1 லீட்ஸ் 2002 ஆக.23 வெற்றி

31. 176 மேற்கிந்தியத் தீவுகள் 2 கொல்கத்தா 2002 நவ.3 டிரா

32. 241* ஆஸ்திரேலியா 1 சிட்னி 2004 ஜன.4 டிரா

33. 194* பாகிஸ்தான் 1 முல்தான் 2004 மார்ச் 29 வெற்றி

34. 248* வங்கதேசம் 1 டாக்கா 2004 டிச.12 வெற்றி

35. 109 இலங்கை 1 புது தில்லி 2005 டிச.22 வெற்றி

36. 101 வங்கதேசம் 1 சிட்டகாங் 2007 மே 19 டிரா

37. 122* வங்கதேசம் 1 மிர்பூர் 2007 மே 26 வெற்றி

38 154* ஆஸ்திரேலியா 1 சிட்னி 2008 ஜன.4 தோல்வி

39. 153 ஆஸ்திரேலியா 1 அடிலெய்டு 2008 ஜன.25 டிரா

40. 109 ஆஸ்திரேலியா 1 நாகபுரி 2008 நவ.6 வெற்றி

41. 103* இங்கிலாந்து 2 சென்னை 2008 டிச.15 வெற்றி

42. 160 நியூசிலாந்து 1 ஹாமில்டன் 2009 மார்ச் 20 வெற்றி

43. 100* இலங்கை 2 ஆமதாபாத் 2009 நவ.20 டிரா

44. 105* வங்கதேசம் 1 சிட்டகாங் 2010 ஜன.18 வெற்றி

45. 143 வங்கதேசம் 1 மிர்பூர் 2010 ஜன.25 வெற்றி

46. 100 தென் ஆப்பிரிக்கா 2 நாகபுரி 2010 பிப்.9 தோல்வி

47. 106 தென் ஆப்பிரிக்கா 1 கொல்கத்தா 2010 பிப்.15 வெற்றி

48. 203 இலங்கை 1 கொழும்பு 2010 ஜூலை 28 டிரா

49. 214 ஆஸ்திரேலியா 1 பெங்களூர் 2010 அக்.11 வெற்றி

50. 111* தென் ஆப்பிரிக்கா 2 செஞ்சுரியன் 2010 டிச.19 தோல்வி

51. 146 தென் ஆப்பிரிக்கா 1 கேப்டவுன் 2011 ஜன.4 டிரா

நாடுகள் வாரியாக-டெஸ்டில்

எதிரணி போட்டி இன். நா.அ ரன் அ.ப. சரா 100 50

ஆஸ்திரேலியா 35 67 7 3,438 241 * 57.30 11 15

பாகிதான் 18 27 2 1,057 194 * 42.28 2 7

இலங்கை 25 36 3 1,995 203 60.45 9 6

மே.இ.தீவுகள் 19 30 2 1,546 179 55.21 3 9

ஜிம்பாப்வே 9 14 2 918 201 * 76.50 3 3

இங்கிலாந்து 28 47 4 2,423 193 56.34 7 12

நியூஸிலாந்து 22 36 5 1,532 217 49.41


தென் ஆப்பிரிக்கா 25 45 4 1,741 169 42.46 7 5

வங்கதேசம் 7 9 3 820 248 * 136.66 5 -

மொத்தம் 188 311 32 15,470 248 * 55.44 51 65

இந்தியாவில்... 82 135 15 6,765 217 56.37 22 29

வெளிநாட்டில்... 106 176 17 8,705 248 * 54.74 29 36

முதல் இன்னிங்ஸ் - 185 9 10,924 248 * 62.06 38 43

2-வது இன்னிங்ஸ் - 126 23 4,546 176 44.13 13 22

ஒருநாள் போட்டியில்...

எதிரணி போட்டி இன். நா.அ ரன் அ.ப. சரா 100 50

ஆஸ்திரேலியா 71 70 1 3,077 175 44.59 9 15

பாகிஸ்தான் 68 66 4 2,474 141 39.90 5 15

இலங்கை 84 80 9 3,113 138 43.84 8 17

மே.இ.தீவுகள் 39 39 9 1,573 141* 52.43 4 11

ஜிம்பாப்வே 34 33 5 1,377 146 49.17 5 5

இங்கிலாந்து 37 37 4 1,455 120 44.09 2 10

நியூஸிலாந்து 42 41 3 1,750 186* 46.05 5 8

தென் ஆப்பிரிக்கா 57 57 1 2,001 200* 35.73 5 8

வங்கதேசம் 12 11 1 496 114 49.60 1 2

பெர்முடா 1 1 1 57 57* - - 1

அயர்லாந்து 2 2 - 42 38 21.00 - -

கென்யா 10 9 3 647 146 107.83 4 1

நமீபியா 1 1 - 152 152 152.00 1 -

நெதர்லாந்து 2 2 - 79 52 39.50 - 1

யூ.ஏ.இ. 2 2 - 81 63 40.50 - 1

மொத்தம் 462 451 41 18,374 200* 44.81 49 95

இந்தியாவில் 164 160 15 6,976 200* 48.11 20 38

பொதுவான

இடத்தில் 151 145 16 6,333 152 49.09 17 33

வெளிநாட்டில் 147 146 10 5,065 163* 37.24 12 24

ஒரு நாள் போட்டி சதங்கள்

ரன் எதிரணி இடம் தேதி முடிவு

1. 110 ஆஸ்திரேலியா கொழும்பு 1994 செப்.9 வெற்றி

2. 115 நியூசிலாந்து வடோதரா 1994 அக்.28 வெற்றி



3. 105 மேற்கிந்தியத் தீவுகள் ஜெய்ப்பூர் 1994 நவ.11 வெற்றி



4. 112* இலங்கை ஷார்ஜா 1995 ஏப்.9 வெற்றி



5. 127* கென்யா கட்டக் 1996 பிப்.18 வெற்றி



6. 137 இலங்கை புது தில்லி 1996 மார்ச் 2 தோல்வி



7. 100 பாகிஸ்தான் சிங்கப்பூர் 1996 ஏப்.5 தோல்வி



8. 118 பாகிஸ்தான் ஷார்ஜா 1996 ஏப்.15 வெற்றி



9. 110 இலங்கை கொழும்பு 1996 ஆக.28 தோல்வி



10. 114 தென் ஆப்பிரிக்கா மும்பை 1996 டிச.14 வெற்றி



11. 104 ஜிம்பாப்வே பெனானி 1997 பிப்.9 வெற்றி



12. 117 நியூசிலாந்து பெங்களூர் 1997 மே 14 வெற்றி



13. 100 ஆஸ்திரேலியா கான்பூர் 1998 ஏப்.7 வெற்றி



14. 143 ஆஸ்திரேலியா ஷார்ஜா 1998 ஏப்.22 தோல்வி



15. 134 ஆஸ்திரேலியா ஷார்ஜா 1998 ஏப்.24 வெற்றி



16. 100* கென்யா கொல்கத்தா 1998 மே 31 வெற்றி



17. 128 இலங்கை கொழும்பு 1998 ஜூலை 7 வெற்றி



18. 127* ஜிம்பாப்வே புலவாயோ 1998 செப்.26 வெற்றி



19. 141 ஆஸ்திரேலியா டாக்கா 1998 அக்.28 வெற்றி



20. 118* ஜிம்பாப்வே ஷார்ஜா 1998 நவ.8 வெற்றி



21. 124* ஜிம்பாப்வே ஷார்ஜா 1998 நவ.13 வெற்றி



22. 140* கென்யா பிரிஸ்டல் 1999 மே 23 வெற்றி



23. 120 இலங்கை கொழும்பு 1999 ஆக.29 வெற்றி



24. 186 நியூசிலாந்து ஹைதராபாத் 1999 நவ.8 வெற்றி



25. 122 தென் ஆப்பிரிக்கா வடோதரா 2000 மார்ச் 17 வெற்றி



26. 101 இலங்கை ஷார்ஜா 2000 அக்.20 தோல்வி



27. 146 ஜிம்பாப்வே ஜோத்பூர் 2000 டிச.8 தோல்வி



28. 139 ஆஸ்திரேலியா இந்தூர் 2001 மார்ச் 31 வெற்றி



29. 122* மேற்கிந்தியத் தீவுகள் ஹராரே 2001 ஜூலை 4 வெற்றி



30. 101 தென் ஆப்பிரிக்கா ஜோகன்னஸ்பர்க் 2001 அக்.5 தோல்வி



31. 146 கென்யா பார்ல் 2001 அக்.24 வெற்றி


32. 105* இங்கிலாந்து செஸ்டர் லீ ஸ்டிரீட் 2002 ஜூலை 4 முடிவு இல்லை


33. 113 இலங்கை பிரிஸ்டல் 2002 ஜூலை 11 வெற்றி



34. 152 நமீபியா பீட்டர்மெரிட்ஸ்பர்க் 2003 பிப்.23 வெற்றி



35. 100 ஆஸ்திரேலியா குவாலியர் 2003 அக்.26 வெற்றி



36. 102 நியூசிலாந்து ஹைதராபாத் 2003 நவ.15 வெற்றி

37. 141 பாகிஸ்தான் ராவல்பிண்டி 2004 மார்ச் 16 தோல்வி

38. 123 பாகிஸ்தான் ஆமதாபாத் 2005 ஏப்.12 தோல்வி

39. 100 பாகிஸ்தான் பெஷாவர் 2006 பிப்.6 தோல்வி

40. 141* மேற்கிந்தியத் தீவுகள் கோலாலம்பூர் 2006 செப்.14 தோல்வி

41. 100* மேற்கிந்தியத் தீவுகள் வடோதரா 2007 ஜன.31 வெற்றி

42. 117* ஆஸ்திரேலியா சிட்னி 2008 மார்ச் 2 வெற்றி

43. 163* நியூசிலாந்து கிறைஸ்ட்சர்ச் 2009 மார்ச் 8 வெற்றி

44. 138 இலங்கை கொழும்பு 2009 செப்.14 வெற்றி

45. 175 ஆஸ்திரேலியா ஹைதராபாத் 2009 நவ.5 தோல்வி

46. 200* தென் ஆப்பிரிக்கா குவாலியர் 2010 பிப்.24 வெற்றி

47. 120 இங்கிலாந்து பெங்களூர் 2011 பிப்.27 "டை'

48. 111 தென் ஆப்பிரிக்கா நாகபுரி 2011 மார்ச் 12 தோல்வி

49 114 வங்கதேசம் டாக்கா 2012 மார்ச் 16 தோல்வி

50 கிலோ எடையை இழந்ததாக உணர்ந்தேன்

சர்வதேச கிரிக்கெட்டில் தனது 100-வது சதத்தை அடித்தபிறகு 50 கிலோ எடையை இழந்தது போன்று உணர்ந்ததாக சச்சின் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியது: என்னைச் சுற்றி இருந்த 100-வது சதம் என்ற மைல்கல் காரணமாக மனதளவில் மிகவும் கடினமாக உணர்ந்தேன். சதமடித்த பிறகு மகிழ்ச்சியில் மூழ்கவில்லை என்றாலும், 50 கிலோ எடையை இழந்ததுபோன்று உணர்ந்தேன் என்று நகைச்சுவையாகக் கூறினார்.

இது எனக்கு மிகவும் கடினமான காலக்கட்டமாக அமைந்தது. குறிப்பாக ஆஸ்திரேலியத் தொடர் கடினமாக அமைந்தது. அதில் சிறப்பாக விளையாடியபோதும், அதிர்ஷ்டம் இல்லாமல் போனதாக கருதுகிறேன். எவ்வளவு சதமடிக்கிறோம் என்பது முக்கியம் அல்ல, அணிக்காக ஆடுவதே முக்கியம். 100-வது சதத்தைப் பற்றி நான் ஒருபோதும் சிந்தித்ததில்லை. ஆனால் ஹோட்டல் உள்ளிட்ட எந்த இடத்தில் நான் இருந்தாலும், அங்கெல்லாம் என்னுடைய 100-வது சதத்தைப் பற்றிதான் ஊடகங்கள் பேசின. இது எனக்கு மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்தியது. யாரும் என்னுடைய 99 சதங்களைப் பற்றி பேசவில்லை என்றார்.



தனது ஒருநாள் போட்டி வரலாற்றில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் அவர் மிகவும் மெதுவாக ஆடி ரன் குவித்தார். அதுபற்றி கூறுகையில், " ரன் குவிப்பது மிகவும் கடினமாக இருந்தது. பந்து சரியான முறையில் பேட்டுக்கு வரவில்லை' என்றார்.


மூலம் : http://www.dinamani.com/edition/Story.aspx?SectionName=Sports&artid=568095&SectionID=142&MainSectionID=142&SEO=&Title=சதத்தில் சதம் கண்டார் சச்சின்

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts