வெள்ளி, ஜூலை 23, 2010

800 விக்கெட் வீழ்த்தி முரளிதரன் சாதனை

முதல் வீரர்

டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரரானார் இலங்கையின் முரளிதரன். 133 போட்டிகளில் பந்து வீசிய இவர், இந்த இலக்கை எட்டியுள்ளார். டெஸ்ட் அரங்கில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள்:
வீரர் போட்டி விக்கெட்
முரளிதரன் (இலங்கை) 133 800
ஷேன்வார்ன் (ஆஸி.,) 145 708
அனில் கும்ளே (இந்தியா) 132 619
மெக்ராத் (ஆஸி.,) 124 563
வால்ஷ் (வெ.இண்டீஸ்) 132 519
கபில்தேவ் (இந்தியா) 131 434
ரிச்சர்ட் ஹாட்லி (நியூசி.,) 86 431
ஷான் போலக் (தெ.ஆ.,) 108 421
வாசிம் அக்ரம் (பாக்., ) 104 414

7 வது முறை
நேற்றைய போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்திய இலங்கை அணி, டெஸ்ட் அரங்கில் 7 வது முறையாக இப்பெருமை பெற்றுள்ளது. தவிர, இந்தியாவுக்கு எதிராக இது 2 வது முறை. இதற்கு முன் கடந்த 2001 ம் ஆண்டு காலேவில் நடந்த போட்டியில், இலங்கை அணி, இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

793 முதல் 800 வரை
காலே டெஸ்ட் போட்டியில் முரளிதரன் கைப்பற்றிய முதல் விக்கெட் இந்தியாவின் சச்சின். கடைசி விக்கெட் பிரக்யான் ஓஜா. காலே போட்டிக்கு முன்னதாக, இவர் 792 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். இப்போட்டியில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். காலேவில் முரளிதரன் கைப்பற்றிய விக்கெட்டுகள்:
விக்கெட் வீரர்
793 சச்சின்
794 தோனி
795 யுவராஜ்
796 பிரக்யான் ஓஜா
797 மிதுன்
798 யுவராஜ்
799 ஹர்பஜன்
800 ஓஜா

சாதனைகள் பல....
* டெஸ்ட் (133 போட்டி, 800 விக்.,) மற்றும் ஒரு நாள் அரங்கில் (337 போட்டி, 515 விக்.,) அதிக விக்கெட்டுகள்.
* டெஸ்ட் அரங்கில் அதிக முறை (67) 5 விக்கெட்டுகள் .
* டெஸ்ட் போட்டிகளில், அதிக முறை (22) 10 விக்கெட்டுகள்.
* தொடர்ச்சியாக டெஸ்ட் போட்டிகளில் 4 முறை 10 விக்கெட்டுகள்.
* டெஸ்ட் போட்டிகள் விளையாடும் ஒவ்வொரு அணிக்கு எதிராகவும் 50 விக்கெட்டுகள் மற்றும் அதற்கு மேல் வீழ்த்தி சாதனை.
* டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை தொடர் நாயகன் (10) விருது.
* 2000, 2001, 2006 ம் ஆண்டுகளில், தலா 75 விக்கெட்டுகள் மற்றும் அதற்கு மேல் வீழ்த்திய ஒரே வீரர்.

விக்கெட் இல்லை
காலே டெஸ்டில் முரளிதரன் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்திக் கொண்டிருக்க, மறுமுனையில் இந்திய சுழற் பந்து வீச்சாளர் ஹர்பஜன் பெரும் ஏமாற்றம் அளித்துள்ளார். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 32.1 ஓவர் வீசிய ஹர்பஜன், ஒரு விக்கெட் கூட வீழ்த்த வில்லை. டெஸ்ட் போட்டிகளில் ஹர்பஜன் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாமல் இருப்பது இது 6 வது முறை.

5 வது வீரர்
காலே டெஸ்டின், இரண்டாவது இன்னிங்சில் 69 ரன்கள் எடுத்த இந்திய வீரர் லட்சுமண், அந்நிய மண்ணில் விளையாடிய டெஸ்ட் போட்டிகளில் 4000 ரன்களை கடந்த 5 வது இந்திய வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் சச்சின் (7521), டிராவிட் (6631), கவாஸ்கர் (5055), கங்குலி (4032) ஆகியோர் அந்நிய மண்ணில்

http://sports.dinamalar.com/NewsDetail.aspx?Value1=2&Value2=6607&Value3=A

0 comments:

கருத்துரையிடுக

You can replace this text by going to "Layout" and then "Page Elements" section. Edit " About "

Ads 468x60px

Featured Posts